இயற்கை உர விற்பனை விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை, ஜன. 29: திருவண்ணாமலையில் சுபஸ்ரீ பயோ எனர்ஜீஸ் நிறுவனம் சார்பில் இயற்கை உர விற்பனை விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கருத்தரங்கை மண்டல இணைப்பதிவாளர் ச.சுப்பிரமணியன்
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஜன. 29: திருவண்ணாமலையில் சுபஸ்ரீ பயோ எனர்ஜீஸ் நிறுவனம் சார்பில் இயற்கை உர விற்பனை விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

 இக்கருத்தரங்கை மண்டல இணைப்பதிவாளர் ச.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, பிஎஸ்ஓ 6 இயற்கை உரம் குறித்த கையேட்டையும் வெளியிட்டார். இதில், மாவட்டத்திலுள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் தனி அலுவலர்கள், செயலர்கள் பங்கேற்றனர்.

  திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மைய தலைவர் என்.ராமமூர்த்தி இயற்கை வேளாண்மையில் பணப் பயிர்கள் குறித்து பேசினார்.  பிஎஸ்ஓ 6 இயற்கை உரத்தின் தன்மைகள், சிறப்புகள், பயன்கள் குறித்து செயல் இயக்குநர் டி.சாலை சிவப்பிரகாசம், மேலாண்மை இயக்குநர் எஸ்.துரைராஜூ ஆகியோர் விளக்கினர்.

 மேலும், "கோழிப் பண்ணைகளில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் நொதிக்க வைத்து பதனிட்டு சக்தி மிகுந்த இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இது மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்து, விளைச்சலை பெருக்க உதவுகிறது' என கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.   மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஏ.கணேசன், பொதுமேலாளர் பி.சுந்தரேசன், கூட்டுறவு விற்பனை இணையம் மண்டல மேலாளர் ஜி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com