ஆரணி, ஜூலை 3: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஏரியில் மூழ்கி, மாணவன் இறந்தார்.
கண்ணமங்கலம் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த முஸ்தபாவின் மகன்கள் அபுஜாகீர் (11), யாசிப் (12) ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கண்ணமங்கலம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினராம். உடனிருந்தவர்கள் எழுப்பிய சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர்.
அபுஜாகீர் அதே இடத்தில் இறந்து போனார். யாசிப் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த அபுஜாகீர் கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார்.
இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.