ஆம்பூர், ஜூலை 3: ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி புதிய முதல்வராக முனைவர் பி.எம். ஆதில் அஹமத் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இக் கல்லூரி முதல்வராக இருந்த டி.நிசார் அஹமத் கடந்த வியாழக்கிழமை பணிநிறைவு பெற்றார். அதைத் தொடர்ந்து கல்லூரியின் நிறும செயலாண்மை துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்த பி.எம்.ஆதில் அஹமத் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.