வேலூர், ஜூலை 3: வேலூர், சத்துவாச்சாரியில் கே பள்ளி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பகுதி 3 வடக்கு அவென்யூ சாலையில் அப்பு லிட்டில் சேம்ப்ஸ் கே பள்ளியை கலவை சச்சிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு தாளாளர் வி.எம். பாலாஜி இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் லக்குமிபதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.