குடியாத்தம், ஜூலை 3: குடியாத்தம் பரதராமி அடுத்த டி.பி. பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரவிஜய ஆஞ்சனேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், வியாசாஸ்ரமம் மடாதிபதி ஸ்ரீ பரிபூர்ணாநந்தா சுவாமிகள், விஜயவாடா அனுமந்தீட்ஷா ஸ்ரீ துர்க பிரசாத் சுவாமிகள், கொல்லிமலை ஸ்ரீ ஜானகிராம சித்தர் சுவாமிகள், சித்தேஸ்வரம் ஸ்ரீ சுத்த சைதன்யானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி சுமார் 5 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கோயில் தர்மகர்த்தா ஜி. பத்மனாபய்யா, பெங்களூர் பி.சுப்பிரமணியம் நாயுடு, பரதராமி ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி பாலாஜி மற்றும் விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.