வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (24), திமிரியில் நடைபெறவிருந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க சனிக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
ஆர்க்காடு நகர காவல் நிலையம் அருகே வரும் ஆட்டோ மீது விழுப்புரத்திலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மோதியதாம். விபத்தில் படுகாயம் அடைந்த கோபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.