ஆரணி, ஜூலை 3: ஆரணியை அடுத்த விண்ணமங்கலத்தில் ஸ்ரீஅன்பு ஏஜென்சீஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது (படம்).
இதனை முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் திறந்து வைத்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளர் வி.ரவி வரவேற்றார்.
ஜெயலட்சுமி பாலசுப்பிரமணியன், சகுந்தலா ஏழுமலை, லதா ஏழுமலை, வளர்மதி பாலகிருஷ்ணன், சாந்தி மாசி, லலிதா ராஜன், சித்ரா சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசன், மாவட்ட கவுன்சிலர் ஆ.வேலாயுதம், மேற்குஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வெள்ளை கணேசன், திமுக ஒன்றியச் செயலர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.