போளூர், ஜூலை 3: போளூர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர்.
ராமஜெயம் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சென்னை தொழிலதிபர் அபிராமி ராமநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
புதிய தலைவராக பாஸ்கர், செயலராக இன்னசென்ட்ராஜ், பொருளாளராக அருண்பிரகாஷ் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
முன்னாள் தலைவர் பிரகாஷ், முன்னாள் செயலர் பழனி, சங்க ஆளுநர் பழனி, நிர்வாகிகள் ஆனந்த் பிரகாஷ், மனோஜ்குமார், ராஜேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.