வாலாஜாபேட்டை,ஜூலை 3: வாலாஜா அடுத்த கீழ்வீராணத்தைச் சேர்ந்த வியாபாரி முருகானந்தம் (34), தனது நண்பர் சங்கருடன் கடந்த மார்ச் 29ஆம் தேதி வேலூரிலிருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு பைக்கில் கீழ்வீராணம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது வாலாஜா பை பாஸ் சாலை தேவதானத்தில், பைக்கை வழிமறித்த 4 பேர் முருகானந்தத்திடமிருந்த ரூ. 38 ஆயிரம் மற்றும் பொருள்களைப் பறித்துச் சென்றனராம்.
இதுதொடர்பாக வாலாஜா போலீஸôர் வழக்குப் பதிந்து, வாலாஜாவைச் சேர்ந்த சீனிவாசன் (20), வன்னிவேடைச் சேர்ந்த கார்த்தி (22), நித்தியா(எ) நித்தியானந்தம்(19), கௌரிசங்கர் (19) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.