ஆரணி, ஜூலை 14: ஆரணி புதுக்காமூர் புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் 11-ம் ஆண்டு புத்திர காமேட்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த யாகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத 108 தம்பதிகள் கலந்துகொண்டனர். திருவலம் சாந்தா சுவாமிகள், யாகத்தில் கலந்துகொண்டு பேசும்போது, தசரத சக்கரவர்த்தி தனக்கு பிள்ளை வரம் வேண்டி இந்த இடத்தை தேர்ந்தெடுத்து யாகம் நடத்தியதால் அவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்ததாம். எனவே இந்த புத்திர காமேட்டி யாகத்தில் முழு நம்பிக்கையுடன் பங்கேற்று தெய்வத்தை வணங்கிச் சென்றால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்றார்.