திருவண்ணாமலை, ஜூலை 14: கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் உலக வன நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் (பொ) ஏ.தமிழ்மணி தலைமை தாங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். மாணவர்கள் வனவளத்தையும், விலங்குகளையும் காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு என்.எஸ்.எஸ். மாணவனும் ஒரு மரக்கன்றை தத்தெடுத்து பள்ளியை விட்டுச் செல்லும் வரை பராமரிக்க உறுதியேற்றனர். வனமோத்சவ் குறித்து என்.எஸ்.எஸ். அலுவலர் ரூபன் ஜெபானந்தன் விளக்கிப் பேசினார்.