திருவண்ணாமலை, ஜூலை 14: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வகையான வாகனங்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகின்றன.
ஏலம் கோருவோர் முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். ஏலத்துக்கு முன்பாக நுழைவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி அதற்கான ரசீது பெற்ற பின்னரே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர் ஏலத்தொகை முழுவதையும் செலுத்த வேண்டும். ஏலத்தொகைக்கு 4 சதவீத விற்பனை வரியை சேர்த்து செலுத்த வேண்டும். என்ஜின் எண், சேஸிஸ் எண் இல்லாத வாகனங்களுக்கு மோட்டார் வாகன அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது.
மேலும் விவரங்களுக்கு "கூடுதல் எஸ்.பி. மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்' என்ற முகவரியிலோ அல்லது 04175-233920 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூடுதல் எஸ்.பி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.