வேலூர், ஜூலை 14:கலவை மேற்கு தொடக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, லயன்ஸ் சங்கம் ஆகியன இணைந்து இந்த முகாமை நடத்தவுள்ளன.
முகாமை எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன் தொடங்கி வைக்கிறார். முகாமில் கண்புரை, மாறுகண், கருவிழிப்புண், பார்வை கோளாறு உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.
தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்படும். உணவு, போக்குவரத்து, அறுவை சிகிச்சை, மருந்து, உள்விழி லென்ஸ் ஆகியன இலவசம்.