ஆம்பூர், ஜூலை 14: ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்எல்ஏ ஏ. அஸ்லம் பாஷா ஆய்வு செய்தார். அப்போது அங்கு முறைகேடுகள் நடப்பதாகப் புகார் தெரிவித்தார்.
இக்கிடங்கிலிருந்து மானிய விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது. பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால் என்பவர் மானிய விலை சிமென்ட் பெறுவதற்குறிய தொகையை வரைவோலையாக வழங்கியப் பிறகும் சிமென்ட் தனக்கு வழங்கப்படவில்லை என எம்எல்ஏ அஸ்லம்பாஷாவிடம் புகார் கூறினார்.
இதையடுத்து, அக்கிடங்கில் கோப்புகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் கிடங்கில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.