ஆலங்காயம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த வீரபத்திரனின் மகள் மாலதி (17), மர்மமான முறையில் இறந்தார்.
இவர் திருப்பத்தூரில் விடுதியில் தங்கி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட மாலதி, அங்கு வியாழக்கிழமை இறந்தார்.
இவரது சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அளித்த புகாரின்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.