பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும்

திருவண்ணாமலை, ஜூலை 14: பெண்கள் கல்வியறிவு பெற்றால் தான் நாடு முன்னேறும் என புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் கூறினார். திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலைக்கல்லூ
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஜூலை 14: பெண்கள் கல்வியறிவு பெற்றால் தான் நாடு முன்னேறும் என புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் கூறினார்.

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஆர்.ஷண்முகவள்ளி தலைமை தாங்கினார். வகுப்புகளைத் தொடங்கி வைத்து ராமதாஸ் பேசியது:

ஒருவர் எதிர்காலத்தில் எந்த நிலையில் இருக்கப்போகிறார் என்பதை கல்லூரி வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. மாணவிகள் வரும் மூன்றாண்டுகளில் நன்றாக பயின்றால் தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். அமெரிக்க அதிபர் ஓபாமாவே நமது நாட்டின் முன்னேற்றம் குறித்து வியந்து பேசியுள்ளார். நமது நாட்டுக்கு உள்ள மிகப்பெரிய செல்வமே இளைஞர்களும், இளம்பெண்களும்தான்.

உலகில் தற்போது உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், கணினி நிபுணர்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக உள்ளார். கல்லூரியில் பயின்றாலும் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க மாணவிகள் கவனம் செலுத்த வேண்டும்.

 விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் என சமூகத்துக்கு தங்களால் ஆன பணியை செய்யவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.