வந்தவாசி, ஜூலை 14: தமிழக அரசின் வழிகாட்டும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச 3 சக்கர சைக்கிள்கள் வந்தவாசி ஆர்.டி.யு.அறக்கட்டளை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.
இதில் வந்தவாசி மற்றும் தெள்ளார் ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலி, செயற்கை கால், காது கேட்கும் கருவி, ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தைச் சேர்ந்த சந்திரமோகன் இந்த உபகரணங்களை வழங்கினார்.
அறக்கட்டளை இயக்குநர் தோமினிக்சேவியர், ஒருங்கிணைப்பாளர்கள் பவுன், ரவி, ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.