வேலூர், ஜூலை 14: ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் வேலூர் வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார் பள்ளியில் மாநில அளவிலான திருக்குறள் போட்டி இம்மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்து வகுப்புக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 10ஆயிரம், ரூ. 7,500, ரூ. 5000 வழங்கப்படும். விவரங்களுக்கு 0416-2222043.