செய்யாறு, ஜூலை 14: வேளாண் கருவிகள், உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி ரத்து செய்ததற்கு தமிழக விவசாய சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் வி.ஜி.புருஷோத்தமன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீடி, புகையிலை மதுபானங்கள் போதைப் பொருள்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும். மீனவர் நலனைக்காக்கும் வகையில் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும், கச்சாநூல் வரிக்கு மானியம் தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.