வந்தவாசி, ஜூலை 14: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத்துறை ஆரணி கோட்ட உதவி இயக்குநர் ஜி.செல்வபெருமாள் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் சார்லஸ் வரவேற்றார்.
மருத்துவர்கள் ஆர்.லில்லி இந்திரா, கே.சிவசங்கரி உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். இதில் 586 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.