ஆரணி, ஜூலை 23: ஆரணி ஒன்றியம் சேவூர், அடையபுலம் கிராமங்களில் கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சேவூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து, பெரிய நீர்வரத்து கால்வாய் அமைத்தல், சித்தேரியிலிருந்து நீர்வரத்து கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டன. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அடையபுலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கினார்.
மேற்கண்ட கூட்டங்களில் திருவண்ணாமலை தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் மோகன்ராஜ், வட்டார வளச்சி அலுவலர் உதயகுமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.