வேலூர், ஜூலை 23: இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் இருவருக்கு அதன் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவில் முதலிடம் பெற்ற எஸ். நந்தினி, அடிப்படை பொறியியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவி மீனாட்சி திருஞானம் ஆகியோருக்கு வெங்கடேஸ்வராகல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி தலைவர் என். ரமேஷ் இதை வழங்கினார் (படம்).
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவர் என். ஜனார்த்தனன், கல்லூரி முதல்வர் எம். ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.