அரக்கோணம், ஜூலை 23: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் மகளிர்களில் சுய உதவிக் குழுக்களில் இல்லாதவர்களாக இருந்தால் அவர்கள் உடனே சுய உதவிக்குழுக்களை அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது என காவனூர் ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சியின் கிராம சபைக் கூட்டம், அதன் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய கணக்குபிரிவு அலுவலர் தாசபிரகாஷ், ஊராட்சி உதவியாளர் தேவன், மக்கள் நலப் பணியாளர் சேகர், பாமக ஒன்றியச் செயலர் ஜெ.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு ஊக்கத் தொகை