பொதுமக்களிடம் போலீஸார் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும்

திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸார் தங்களை நாடி வரும் பொதுமக்களிடம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வேலூர் சரக டிஐஜி எஸ்.என்.சேஷசாயி அறிவுறுத்தி உள்ளார். வேலூர் சர
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸார் தங்களை நாடி வரும் பொதுமக்களிடம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வேலூர் சரக டிஐஜி எஸ்.என்.சேஷசாயி அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக சேஷசாயி திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை வந்தார்.

மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி. பி.சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார்.

அதன் பின் நிருபர்களிடம் டிஐஜி சேஷசாயி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை காப்பது, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துதல், போக்குவரத்து சீரமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

காவல் நிலையத்துக்கு புகார் தர வரும் பொதுமக்களை மனிதநேயத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

போலீஸ் அதிகாரிகளும் தங்கள் கீழ் வேலை செய்வோரை தன்மையாக நடத்த வேண்டும்.

மலைப்பகுதிகளில் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றார் சேஷசாயி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.