வந்தவாசி, ஜூலை 23: வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் என்.ஏ.ஜான்பீட்டர் தலைமை வகித்தார். டாக்டர்கள் ஆர்.சுரேஷ்குமார், சௌமியா ரமேஷ், சி.மகேந்திரன், கே.சந்திரமோகன் ஆகியோர் சுமார் 500 மாணவர்களுக்கு சிகிக்சை அளித்தனர்.
தலைமை ஆசிரியர் தோமினிக்சாவியோ, வந்தவாசி காவலர் சிறுவர் மன்றத் தலைவர் ஏ.ஜெ.ரூபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.