திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலை ஸ்ரீ சாயர்தேவி, தான்மல் செüகார் கல்வி அறக்கட்டளை சார்பில் இரண்டாயிரம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வணிகவரித் துறை அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை வழங்கினார்.
இதற்கான விழா ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தாளாளர் வி.பவுன்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலர் டி.எஸ்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ச.சுகன்யா பரிசளித்தார். பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் பரிசளித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் 88 பேர், விடிஎஸ் ஜெயின், நகராட்சி, அண்ணாமலை, விக்டோரியா, முகல்புறா, கீழ்நாத்தூர், நல்லவன்பாளையம், அழகானந்தல், காட்டம்பூண்டி, ராஜந்தாங்கல், மெய்யூர், திருக்கோவிலூர், வேளந்தாங்கல் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.
அமைச்சர் பேசுகையில், மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மாணவ, மாணவியர் அரசால் அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி, பள்ளி நிர்வாகிகள் டி.ஸ்ரீயான்ஸ்குமார், வி.சுரேந்திரகுமார், டி.வசந்தகுமார், தலைமை ஆசிரியர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.