திருவண்ணாமலை, ஜூலை 30: இஃப்கோ நடமாடும் மண் ஆய்வுக்கூடம் சார்பில் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள சோமாசிபாடியில் இலவச மண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் உதவி வேளாண் இயக்குநர் ரமணன் பேசுகையில்: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் விவசாயிகள் மண் பரிசோதனைகளை செய்ய வேண்டும். மழைக்காலத்தில் மண்பரிசோதனை செய்தால் மண்ணின் தன்மையை அறிவது கடினம். விவசாயத்துறையின் மூலமும் மண்மாதிரியை ஆய்வு செய்து தருகிறோம் என்றார். முகாமுக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் ச.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய வங்கி தனி அலுவலர் கா.ஜெயம், துணைப்பதிவாளர் கோ.நடராஜன், கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் த.ஏழுமலை, வேளாண் அலுவலர் முத்துராம், மண் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், கள அலுவலர்கள் கருணாகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.