குரூப் 2 தேர்வு: கரூர் மாவட்டத்தில் 4,394 பேர் எழுதினர்

கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 4,394 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1-க்கான த
Published on
Updated on
1 min read

கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 4,394 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1-க்கான தேர்வுகள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

 கரூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்தவர்களில் 5,537 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வெழுதுவதற்கான ஆளறிச்சான்றிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

 கரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பசுபதீசுவரா நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி, கரூர் புனித. தெரசா பள்ளி, பசுபதிபாளையம் விவேகானந்தா, ஸ்ரீசாரதா மேல்நிலைப் பள்ளிகள், புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி, வெண்ணைய்மலை சேரன் பள்ளி, கரூர் சேரன் பள்ளி, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, ஜெயராம் கலைக் கல்லூரி, கொங்கு வெள்ளாளர் பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் பள்ளி, சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, வெண்ணைய்மலை கொங்கு கல்லூரி, தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 23 மையங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர்.

 இதற்காக கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு அறைக்கு 20 பேர் அனுமதிக்கப்பட்டு, ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

 தேர்வெழுத அனுமதி பெற்றிருந்தவர்களில் 4,394 பேர் தேர்வெழுதினர். 1,143 பேர் தேர்வெழுதுவதற்கு வரவில்லை.

 மாவட்டத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்று மாவட்ட வருவாய் அலுவலர் தி. பிச்சையா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.