வேலூர், ஜூலை 30: வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் கால்நடைகளுக்கு இலவச கோமாரி தடுப்பூசி போடப்படவுள்ளது.
கால்நடைகளை வளர்ப்போர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.