குடியாத்தம், ஜூலை 30: பேர்ணாம்பட்டு அடுத்த பத்தரபல்லி ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (41), கோவிந்தராஜ் (35) ஆகிய இருவரையும், அவ்வழியே ரோந்து சென்ற டிஎஸ்பி க. சுந்தரம் தலைமையிலான போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர். மணல் எடுக்க பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.