செய்யாறு, ஜூலை 30: செய்யாறு அருகேயுள்ள காழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் எம்.மணி தலைமையில், சீருடைகளை வி4 நலச் சங்க நிர்வாகிகள் எம்.சரவணன், மோதிலால், ஞானம் ஆகியோர் வழங்கினர்.
ஊராட்சி மன்றத் தலைவர் என்.நடராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் தி.க.சாந்தகுமாரி, சுகாதார ஆய்வாளர் அருளரசு, உதவி ஆசிரியர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.