திருவண்ணாமலை, ஜன. 4: ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சு படையினருக்கும் இடையே நடைபெற்ற வந்தவாசி போர் குறித்து எழுதப்பட்டுள்ள "வந்தவாசி போர்-250' நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் 250 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இப்போரில் ஆங்கிலப் படையினர் வெற்றி பெற்றனர். அதை நினைவு கூறும் வகையில் மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், கவிஞர் அ.வெண்ணிலா ஆகியோர் இணைந்து நூலை எழுதியுள்ளனர்.
அந்நூல் வெளியீட்டு விழா திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் நடைபெற்றது. உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு நூலை வெளியிட, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
இருவரும் நூலின் பல்வேறு அம்சங்களை பாராட்டிப் பேசினர். நூலாசிரியர்கள் ராஜேந்திரன், வெண்ணிலா ஆகியோர் ஏற்புரை ஆற்றினர். எழுத்தாளர் முருகேஷ் தொகுப்புரை ஆற்றினார்.