திருவண்ணாமலை, பிப். 10: திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், உடல் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே. மோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளிச் செயலர் பரத்ராஜ், முதல்வர் சிம்சன் மேஷாக் உள்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடல் ஆரோக்கியம், காலாவதியான மருந்துகளின் தன்மை, முதலுதவிப் பெட்டியின் பயன்பாடு குறித்து பள்ளி மாணவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் விளக்கிக் கூறினர். பள்ளிக்குத் தேவையான முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.