வேலூர்
காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு 6 மாதங்கள் சிறை
வேலூர், பிப். 10: வேலூரில் காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் க.லோகநாதன். இவரிடம் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த
வேலூர், பிப். 10: வேலூரில் காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது.
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் க.லோகநாதன். இவரிடம் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆ.குமார் என்பவர் கடந்த 5-4-2009-ல் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
இக் கடன் தொகைக்கு கடந்த 12-11-2009-ல் குமார் வழங்கிய காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாம்.
இதையடுத்து லோகநாதன் வேலூர் விரைவு நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட்) வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.அரிஹரகுமார் குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.