அரக்கோணம், பிப். 10: சீரான மின்விநியோகம் கோரி அரக்கோணத்தை அடுத்த மின்னல் ஊராட்சியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் மின்னல் இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தில் சனிக்கிழமை முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையும், பின்னர் மாலையில் ஒன்றரை மணி நேரம் என மொத்தம் ஏழரை மணி நேரம் மின்தடையை அமல் செய்ய அரக்கோணம் கோட்ட மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வந்த தகவலையடுத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் பேசிய மின்வாரிய வணிகக் கணக்காளர் மகேந்திரன் இத் தகவலை தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.