குடியாத்தம், பிப். 10: பேர்ணாம்பட்டு அடுத்த கோட்டையூர் வனப் பகுதியில் வியாழக்கிழமை மான்கறி பங்கு போட்டுக் கொண்டிருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (55), ரேணு (18), தென்னரசு (22), முரளி (28), ஆண்டி (50) ஆகிய 5 பேரை ஏஎஸ்பி எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸôர் கைது செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குடியாத்தம் வனச்சரகர் சொக்கலிங்கம், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.