குடியாத்தம், பிப். 10: குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன் வெள்ளிக்கிழமை வழங்கினார் (படம்).
இந் நிகழ்ச்சியில் 54 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான எம்.சேட்டு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கே.சிவலிங்கம், ஊராட்சித் தலைவர் எஸ்.புஷ்பா, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.