காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் சம்ஷத் (38) , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காட்பாடியை அடுத்த கழிஞ்சூரைச் சேர்ந்தவர் பிரேமா (42). இவரது கணவர் பிரேம் வாணியம்பாடி அரசு மாணவர் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தபோது, இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் தனது மகனுக்கு வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைந்த சான்றிதழுக்காக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை பிரேமா நாடினார்.
அங்கு இளநிலை உதவியாளர் பணியில் இருந்த அலுவலர் சம்ஷத் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதையடுத்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் பிரேமா தகவல் அளித்தார்.
போலீஸார் அறிவுரையின்பேரில், 7ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற பிரேமா, சம்ஷத் கேட்ட பணத்தை கொடுத்தபோது கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் பொ.சங்கர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


