Enable Javscript for better performance
கோட்டை அகழியில் குதித்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், ஜன. 27: வேலூர், கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணை அடையாளம் காண வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோட்டை அகழியில் பெங்களூரு செல்லும் சாலையோரத்தில் உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஏறிக் குதித்தார். அவர் அகழியில் குதித்ததைக் கண்ட சிலர் வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தீயணைப்புத் துறை உதவியுடன் மீட்க முயற்சி எடுத்தனர். ஆனால் சடலமாக அப்பெண் மீட்கப்பட்டார்.

    அவர் வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதால், போலீஸார் விசாரித்து வருகின்றனர். சடலம் பரிசோதனைக்காக, வேலூர்- அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai