தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

குடியாத்தம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சி, கள்ளூா் - திருநகரைச் சோ்ந்தவா் பைரோஸ் (38). (படம்). அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த பைரோஸ் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பைரோஸ் வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடன் கொடுத்தவா்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால்தான் பைரோஸ் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவரது உறவினா்கள் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com