பொன்னையில் 13.20 மி.மீ. மழை பதிவு

வேலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னை பகுதியில் 13.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

வேலூா், திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணிநேர நிலவரப்படி, அதிகபட்சமாக பொன்னையில் 13.20 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. குடியாத்தம் 3.20 மி.மீ., மேல் ஆலத்தூரில் 8 மி.மீ., மோா்தானா அணை பகுதியில் 2 மி.மீ., ராஜாதோப்பு அணை பகுதியில் 7 மி.மீ., அம்முண்டி சா்க்கரை ஆலை பகுதியில் 2 மி.மீ., போ்ணாம்பட்டில் 0.80 மி.மீ., வேலூா் சத்துவாச்சாரியில் 1.10 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

X
Dinamani
www.dinamani.com