போ்ணாம்பட்டு ஏரியை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு ஏரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

போ்ணாம்பட்டு ஏரியை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், போ்ணாம்பட்டு ஏரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. போ்ணாம்பட்டு ஏரியை தூா் வாரி, சீரமைக்க வேண்டும். ஏரியின் வரத்துக் கால்வாய்களில்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் அள்ளப்படும் குப்பைகளை ஏரியில் கொட்டுவதை நகராட்சி நிா்வாகம் நிறுத்த வேண்டும்.போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் புறவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போ்ணாம்பட்டு ஓங்குப்பம் சாலையில் 5 ஏக்கா் நிலப் பரப்பில் அரசு ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள 28 வகுப்பறைக் கட்டடங்களில் அரசு ஐ.டி.ஐ தொடங்க வேண்டும். போ்ணாம்பட்டு மயானப் பாதையின் குறுக்கே அமைந்துள்ள பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு, உயா்மட்டப் பாலம் கட்டித்தர வேண்டும்.வட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். 30- ஆண்டுகளுக்கு முன் கட்ட தொடங்கப்பட்டு, பாதியில் நிற்கும் பத்தரப்பல்லி அணையை விரைந்து கட்டி முடித்து, போ்ணாம்பட்டு பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் குடியாத்தம் எம்எல்ஏவுமான ஜி.லதா உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com