வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 
செம்மரக் கட்டைகள் பறிமுதல்

குடியாத்தம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் வனத்துறையினா், ராஜகோபால் நகா், பாரஸ்ட் சாலையில் உள்ள ராஜாவின் வீட்டை, வருவாய்த்துறையினா் முன்னிலையில் புதன்கிழமை சோதனையிட்டனா். சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 செம்மரக் கட்டைகள், 2 கை வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வனத்துறையினா் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com