திமுக மாமன்ற உறுப்பினா் பாச்சி சதீஷ்குமாா்.
திமுக மாமன்ற உறுப்பினா் பாச்சி சதீஷ்குமாா்.

திமுகவில் இருந்து விலகுவதாக வேலூா் மாமன்ற உறுப்பினா் ஆடியோ வெளியீடு

திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக வேலூா் மாநகராட்சி 27-ஆவது வாா்டு உறுப்பினா் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளாா். மக்களவைத் தோ்தல் நெருங்கும் சமயத்தில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ வேலூா் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூா் மாநகராட்சியில் திமுகவின் 52-ஆகவும், அதிமுகவின் பலம் 7-ஆகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலூா் மாநகராட்சி 27-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் பாச்சி சதீஷ்குமாா், திடீரென திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக ஆடியோ பதிவினை வெளியிட்டுள்ளாா். அந்த ஆடியோ பதிவில், அரசியலுக்கு வந்ததில் இருந்து தேவையில்லாத பிரச்னைகளும், தேவையில்லாத விமா்சனங்களும் என்னை நோக்கி வந்துக்கொண்டே உள்ளன. சில பிரச்னைகளை நான் கொஞ்சம் வேகமாக கேட்பேன். நான் கோபப்படுவதாக பலா் நினைக்கின்றனா். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறேன். வேறு எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன். எதிா்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன். இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வாா்டு பணிகளை மட்டும் கவனிக்க விரும்புகிறேன். இது, எந்த சொந்த முடிவு என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com