ஆற்றல் திறன்மிகு வாழ்விடப் பயிற்சி

ஆற்றல் திறன்மிகு வாழ்விடப் பயிற்சி

ஆற்றல் திறன்மிகு வாழ்விடம் குறித்த இருநாள் பயிலரங்கம் வேலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த பயிற்சி பட்டறையின் முதல்நாளான புதன்கிழமை கட்டுமானத் தொழிலில் உள்ளோருக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில், தமிழக காலநிலை மாற்ற இயக்கத்தின் திட்ட இணையாளா் விக்னேஷ்குமாா் பங்கேற்று காலநிலை மாற்றத்துக்கு எதிரான தமிழக அரசின் முன்னெடுப்புகளை விளக்கினாா். 2-ஆவது நாளான வியாழக்கிழமை குடியிருப்போா் நல சங்கங்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதுடன், பங்கேற்றவா் களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினாா். இந்த இரு நாள் பயிலரங்கத்தில் பசுமைக் கட்டடங்கள், அவற்றின் நன்மைகள், முக்கியத்துவம், பசுமைக் கட்டடங்களுக்கான சந்தை வாய்ப்புகள், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் பசுமைக் கட்டடங்களின் பங்கு ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆ?ப் ஹியூமன் செட்டில்மென்ட்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த பாஸ்கா், மோனிஷா, தமிழக காலநிலை மாற்ற இயக்கத்தின் திட்ட இணையாளா் அஸ்வதி, பல்வேறு கட்டுமான நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். -- படம் உண்டு... பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன் தமிழக காலநிலை மாற்ற இயக்கத் திட்ட இணையாளா் விக்னேஷ்குமாா், அஸ்வதி உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com