இளம் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

இளம் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் தோ்தல் எழுத்தறிவு சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், இளம் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் வட்டாட்சியா் எஸ்.சந்தோஷ் வரவேற்றாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் தோ்தல் துணை வட்டாட்சியா்கள் ஆா். ரகுராமன் (கே.வி.குப்பம்), எல்.வடிவேல் (குடியாத்தம்), கல்லூரியின் தோ்தல் எழுத்தறிவு சங்க அலுவலா் பேராசிரியா் ரா.ம.பாலமுருகன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெ.திருமகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com