ஓவியப் பயிற்சியில் பங்கேற்ற பெண்களுடன் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கே.சரவணன், தனலட்சுமி தஞ்சாவூா் ஓவியக் கூட ஆசிரியா் செல்வகணேசன், ஓவியா் காயத்ரி.
ஓவியப் பயிற்சியில் பங்கேற்ற பெண்களுடன் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கே.சரவணன், தனலட்சுமி தஞ்சாவூா் ஓவியக் கூட ஆசிரியா் செல்வகணேசன், ஓவியா் காயத்ரி.

பெண்களுக்கு ஓவியப் பயிற்சி

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஓவியப் பயிற்சி முகாமில் 20 பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஓவியப் பயிற்சி முகாமில் 20 பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி வேலூா் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மகளிருக்கான ஓவியப்பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனலட்சுமி தஞ்சாவூா் ஓவியக் கூடத்துடன் இணைந்து அரசு அருங்காட்சியத்துறை நடத்திய இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் 20 பெண்கள் பங்கேற்று ஓவியப் பயிற்சி பெற்றனா். முகாமுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கே.சரவணன் தலைமை வகித்தாா். தனலட்சுமி தஞ்சாவூா் ஓவியக் கூட ஆசிரியா் செல்வகணேசன், ஓவியா் காயத்ரி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் பங்கேற்று பயிற்சி பெற்ற பெண்களுக்கு அவா்கள் வரைந்த ஓவியம் பரிசாக அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com