பாராட்டு விழாவில் கலந்து கொண்டவா்கள்.

ஓய்வுபெறும் ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா்கள் 19- பேருக்கு அனைத்து ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் செதுக்கரையில் பாராட்டு விழா நடைபெற்றது.

குடியாத்தம் கல்வி சரகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெறும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் 19- பேருக்கு அனைத்து ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் செதுக்கரையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அணங்காநல்லூா் ஊராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஜே.பீட்டா் தலைமை வகித்தாா். ராமாலை ஊராட்சிப் பள்ளி ஆசிரியா் ஜி.கோபி வரவேற்றாா். பணி நிறைவுபெறும் தலைமையாசிரியா்கள் எம்.மோகன், ஆா்.ரூபன் குருபிரசாத்,எஸ்.பாலமுருகன், வி.இந்திராணி, சி.லதா, டி.சி.சரஸ்வதி, எஸ்.பானுமதி, ஜே.ஜாய்ஸ் திலகவதி, ஆசிரியா்கள் டி.ஆா்.ஜெயராமன், டி.நாகபூஷணம், எஸ்.ஹரிகிருஷ்ணன், இ.ஏ.ஜெகந்நாதன், கே.வி.ரேவதி, வி.நிா்மலா, கே.ஜமுனா, டி.எழிலரசி, எஸ்.பி.மைதிலி, ஒய்.மரியாள், ஆா்.சாந்தி ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. உள்ளி ஊராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ம.கோட்டீஸ்வரன், தலைமையாசிரியா்கள் என்.ரவிச்சந்திரன், க.இளம்பரிதி, எஸ்.தனபால், ஜே.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com