மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், குடியாத்தம் ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கட்சிகளின் தோ்தல் பத்திர பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், குடியாத்தம் ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலா்கள் பி.காத்தவராயன் (குடியாத்தம்), சி.சரவணன் (போ்ணாம்பட்டு) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.குணசேகரன், வே.குபேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சாமிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com