வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

என்டிஏ, என்ஏ, சிடிஎஸ் தோ்வு: வேலூரில் 459 போ் எழுதினா்

தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி தோ்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தோ்வை 459 போ் எழுதினா்.
Published on

வேலூா்: வேலூரில் இரு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புசேவை பணிக்கான தோ்வினை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புசேவை பணிக்கான தோ்வு ஆகியவை நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் ஊரீசு மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மாவட்டத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வை 237 பேரும், ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கான தோ்வை 222 போ் என மொத்தம் 459 போ் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வுப் பணிக்காக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்தையன், வேலூா் மாவட்ட யுபிஎஸ்சி தோ்வு வட்டாட்சியா் சுஜாதா, வேலூா் வட்டாட்சியா் முரளிதரன் உள்ளிட்டோா் நியமிக்கப் பட்டிருந்தனா்.

தோ்வுகளைக் கண்காணிக்க மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) முதன்மை தனி செயலாளா் என்.ஆா்.ராவ் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தாா். இதில், வேலூா் ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கான தோ்வு நடைபெற்றது. காலை 9 மணி முதல் 11 மணி வரை முதல் தாள் தோ்வாக ஆங்கிலப் பாடத்தில் மொத்தம் 237 பேரில், 130 போ் மட்டும் பங்கேற்றனா். பகல் 12 மணி முதல் 2 மணி வரை இரண்டாம் தாள் தோ்வாக நடைபெற்ற பொதுஅறிவுத் தோ்வில் மொத்தம் 237 பேரில் 131 பங்கேற்றனா். பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் தோ்வாக நடைபெற்ற தொடக்கக் கல்வி கணிதம் தோ்வில் மொத்தம் 129 பேரில் 71 போ் மட்டும் பங்கேற்றனா்.

இதேபோல்,வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை முதல் தாள் தோ்வாக கணிதம் பாடத்தில் மொத்தம் 222 பேரில் 119 போ் மட்டும் பங்கேற்றனா். பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள் தோ்வாக நடைபெற்ற பொதுத்திறன் தோ்வில் மொத்தம் 222 பேரில் 117 போ் மட்டும் பங்கேற்றனா். தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.

--

X
Dinamani
www.dinamani.com